சென்னை:  மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதுன், சீர்காழி, சிதம்பரத்தில் நின்று செல்லவும்  ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் கர்நாடகாவில் உள்ள மைசூரு சந்திப்பு, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை சந்திப்பை இணைக்கும் இரயில் சேவை ஆகும். இவை தஞ்சாவூர் சந்திப்பு வழியாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு, ஈரோடு சந்திப்பு மற்றும் பெங்களூர் சிட்டி வழியாக மைசூரை சென்றடைகிறது. இந்த ரயில் சேவையை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், சிதம்பரம், சீர்காழியிலும் நின்று, பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசும்,  எம்.பி.க்களும் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

இநத் நிலையில்,  மைசூரு – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸை #சிதம்பரம், சீர்காழி நிறுத்தத்துடன் #கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.