தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (“டாஸ்மாக்”) நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விற்பனை குறைவான 500 டாஸ்மாக்கை பில்டர் செய்து மூடிய நிலையில் அடுத்தகட்டமாக இதன் விற்பனையை நிலைப்படுத்த அனைத்து பிரிவுகளையும் கணினிமயமாக்க முன்வந்துள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்டதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்-டெல் (RailTel) ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ரெயில்-டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அதற்கான திட்டத்தை செயல்படுத்த ரூ. 294.37 கோடிக்கு 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.