தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

Must read

சென்னை: 
திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி  சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பத்து வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு கெட்டுப் போன பிரியாணி சாப்பிட்டதால் இறந்ததைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்து வயது சிறுமி லோக்சனா செவன் ஸ்டார் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு இறந்ததை அடுத்து,  ஆரணியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த பிரியாணியைச் சாப்பிட்ட  21 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை  ஆய்வு செய்தனர். இந்த  சோதனையில் 15 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி உணவகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து காவல்துறை உதவியுடன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்குச் சீல் வைத்தனர். மேலும்,  உரிமையாளர் காதர் பாஷா மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,  உணவு பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சாலையோர உணவகங்களில் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தி ஏராளமான கெட்டுப் போன  உணவுகளை மீட்டது.
இதுகுறித்து  மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவிக்கையில், உடனடியாக தகவல் கிடைத்தவுடன் உணவு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி உணவகங்களில் சோதனை நடத்த உத்தர விட்டேன்.  இதையடுத்து, மாநிலம் முழுவதும் உணவகங்களில்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

More articles

Latest article