சென்னை:
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும் இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம்.
இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் தான் இருக்கிறார்கள். தங்களின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள கட்சியை அடகு வைத்த எடப்பாடியும், பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்ய காத்திருக்கிறார்கள்..?’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel