சென்னை

மிழக முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலக்ரள் சோதனை செய்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்சம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார்கள் எழுந்து வருகின்றன. இவற்றின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தவர் சி விஜயபாஸ்கர்.    இவர் ஏராளமாக லஞ்சம் வாங்கியதாகவும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் அளிக்கப்படன.  இவற்றை முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் மறுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் விஜயபாஸ்கருடைய வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.   இந்த சோதனை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, விராலி மலை  உள்ளிட்ட 43 இடங்களில் நடைபெற்று வருகிறது.