சென்னை

நாளை பராமரிப்புப் பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது அக்டோபர் 18ஆம் தேதி அன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பின் வருமாறு :

பெருங்குடி பகுதி: சந்தீப் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு முழுவதும், சீங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு முழுவதும், சின்ன நீலாங்கரைகுப்பம், சுகன்யா ரோடு, ஈ.சி.ஆர் ஒரு பகுதி மற்றும் நீலாங்கரை பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி: அம்பேத்கர் நகர், மதுரைசாமி மடம் மெயின் தெரு, வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பராமரிப்புப் பணிகள் மாலை 4.00 மணிக்குள் முடிவடைந்தால் உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.