சென்னை: நாளை நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி சுவாமி தரிசனம் செய்கிறார். அதற்கான கட்டணம் ரூ.10ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தருகிறார். காலை 11 மணி அளவில் தூத்துக்குடி வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதையடுத்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ மூலம் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டியதுடன், தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார்.. பின்னர் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து முக்கானி, குரும்பூர், ஆழ்வார் திருநகரி பகுதிகளில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணி அளவில் நாசரேத் செல்லும் ராகுல், அங்கு மக்களிடையே உரையாற்றுகிறார்.
பின்னர் மாலை 5.40 மணி அளவில் சாத்தான்குளம் பகுதியில் மக்களின் வரவேற்பை தொடர்ந்து, அவர்களிடையே உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, இட்டமொழி, மன்னார்புரம் விலக்கு, பரப்பாடி வழியாக சென்று, இரவு 8 மணி அளவில், நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அங்கிருந்து நெல்லை செல்லும் ராகுல், இரவில் நெல்லையில் உள்ள தனியார் விடுதியில். தங்குகிறார்.
2வது நாளான நாளை (28ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை பாளையங்கோட்டை சேவியர்ஸ் காலேஜில், பேராசிரியர்களுடன் சந்திப்பு நடைபெறுகிறது.
காலை 11.35 முதல் 11.55 வரை நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம். அப்போது சிறப்பு அபிஷேகம் உடன் நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் பட்டு சாத்தி வழிபாடு நடத்துகிறார். இதற்காக ரூ.10ஆயிரம் கட்டணம் கோவிலுக்கு செலுத்தப்பட்டுள்ளது
மாலை 4.35 முதல் 5.15 வரை தென்காசி அருகே உள்ள புளியங்குடி பகுதியில் சிறுவணிகர்களுடன் சந்திப்பு
நாளை மறுநாள் (திங்கட்கிழமை மார்ச் 1ந்தேதி ) தென்காசியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.