சென்னை: “பிரதமர் மோடி, குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுல்மீதான குற்றச்சாட்டில், நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்தே நாடாளுமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, ராகுல், நிரவ்மோடி தொடர்பாக விமர்சிக்கும்போது, மோடி பெயரில் உள்ளவர் கள் எல்லாம் திருடர்கள் என்று விமர்சனம் செய்தார். இது குஜராத்தில் உளள மோடி சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல்மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டு ஆண்டுகாலம் தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறருது.
இந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள பாஜக மகளிர்அணி தலைவி வானதி சீனிவாசன், நீதிமன்றம் பிரதமருக்காக நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சமூகத்தை இழிவுபடுத்தியதற்காகவே நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தவர், தமிழ்நாடு அரசும் சமூக வலைதளங்களில் இதுபோல பதிவிட்டர்களை கைது செய்து நடவடிங்ககை எடுத்துள்ளது என சுட்டிக்காட்டினார்.