டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர், மக்களவையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மல்லிகார்ஜுன கார்கே: ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோடி அரசாங்கம் திரு. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயப்படுகிறது. ஜனநாயகத்தை கொலை செய்ய ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்துவிட்டார்கள் என்றும் உண்மை பேசுபவர்களை வாயடைக்க நினைக்கிறார்கள்” என்றும் கூறினார்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், அதானியின் மெகா ஊழல் விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதியாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியே இது. ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு செல்லவும் காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் எனவும் கூறினார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்காக அவர்களை தகுதி நீக்கம் செய்வதா என கேள்வி எழுப்பி உள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே, பிரதமர் மோடியின் புதிய இந்தியா என காட்டமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ்தாக்கரே வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,  ராகுல்காந்தியின் கோரிக்கை  ரத்து செய்யப்பட்டுள்ளது.  தற்போது,  திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக உள்ளனர் ஆனால்,  ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டார் இது ஜனநாயகத்தின் நேரடி கொலை, இது சர்வாதிகாரத்தின் முடிவின் ஆரம்பம் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர்  நாராயணசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயலாகும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் குரலை ஒடுக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது எனவும் கூறினார்.

கனிமொழி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், எத்தனையோ பிரச்சினைகளில் தூங்கிக்கொண்டிருக்கும்  பாஜக அரசு, இநத் பிரச்சினையில் இவ்வளவு வேகமாக செயல்பட்டு, எதிர்க்கட்சசிகளின் குரதலை ஒடுக்கி விட வேண்டும் எனன்ற அவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பியின் பதிவில், ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கை எனவும் கூறினார்.

திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல்காந்தியின் தகுதிநீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் யதேச்சதிகார போக்கை காட்டுகிறது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம் நடக்கிறது. ராகுல்காந்தி தகுதி நீக்கம் திட்டமிட்ட அரசியல் சதி; இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் கூறினார்.

ராகுல் தகுதி நீக்கம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது” என்று அதில் கூறியுள்ளார்.

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராகுலின் ஒற்றுமை நடைபயணம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்துள்ளது. ராகுல் காந்தியை 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுகிறது. ராகுலை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கு வெளிப்படையாக தெரிகிறது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்:  ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக் கூறினால், அவர்களின் பதவியை குறி வைத்து பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்: ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன் என ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்: பேசியதற்கே ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்திருக்கிறார்கள் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கிறோம். துரைமுருகன் எதிர்க்கட்சி உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்தார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல் காந்தி பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.

இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பாஜக இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.