திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல்.

சர்வாதிகார போக்கின் அழிவுக்கு இது ஆரம்பம் என்று சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மோடி என்ற பெயரை உடையவர்கள் செய்த மோசடிகள் குறித்து 2019 ம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதி மற்றும் தேர்தல் வழக்கை கொலை மற்றும் கொள்ளை குற்ற வழக்கில் தீர்ப்பு கிடைத்ததுபோல் பாவித்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் இன்று பறித்துள்ளது.