ஹூப்ளி:

மோடி தலைமையிலான  அரசு லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காதது ஏன்? என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி தலைமையிலான அரசு, ஆட்சியாளர்கள், அரசு உயரதிகாரிகளை விசாரணை செய்ய வகை செய்யும்,  லோக் ஆயுக்தா அமைப்பை இதுவரை  அமைக்காமல் அமைதியாக இருந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி போன்ற பிரச்சினைகள் குறித்து மோடியின் அமைதி வியப்பை அளிப்பதாக கூறிய ராகுல்,அவரது சொந்த மாநிலமான குஜராத்திலும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

டந்த 2013ம் ஆண்டு லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது கடந்த 2013ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், பாஜக அரசு, காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்றா மல் காலம் தாழ்த்தி வருகிறது.

லோக்பால் அமைப்பின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்  இடம் பெற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் எந்த கட்சியும் இல்லை. அதன் காரணமாக அதற்கு தகுந்தவாறு  எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சி என்று திருத்த வேண்டும். இது தொடர்பாக புதிய சட்டம் இயற்றவும், அல்லது சட்டத்தை திருத்தவும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கில், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து  மார்ச் 1ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.