டில்லி

த்திய அரசு எல்லையில் நமது எல்லையில் பாதுகாப்பை புறக்கணிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

சீனப்படைகள் இந்திய எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.   மேலும் அருணாசலப் பிரதேசம் லடாக் பகுதிகளில் எல்லை தாண்டி வந்த சீனப்படைகள் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகப் பலமுறை செய்திகள் வந்தன.  ஆனால் மத்திய அரசு இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காமல் உள்ளது.

இந்நிலையில் சீனா லடாக், உத்தராகாண்ட், அருணாசலப் பிரதேசம் ஆகிய இடங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 10 விமானப்படை தளங்களை அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  மேலும் சீனா இந்தியப் பகுதிகளுக்கு அருகே தனது உள்கட்டமைப்பை அதிகரித்து வருவதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “எல்லைப் பகுதிகளில் இந்தியா ஒரு புதிய போர் முன் மாதிரியைச் சந்தித்து வருகிறது.  மத்திய அரசு எல்லையில் நமது பாதுகாப்பைப் புறக்கணிக்கிறது.  இந்த புறக்கணிப்பு சரியானது இல்லை.  மேலும் இது எவ்வித பலனையும் அளிக்காது” எனப் பதிவு இட்டுள்ளார்.

 

[youtube-feed feed=1]