சென்னை: குமரி முதல் காஷ்மீர் வரை நாளை பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்ஹபதூரில்  அமைக்கப்பட்டுள்ள  நினைவிடத்துக்கு முதன்முறையாக நாளை காலை சென்று மரியாதை செலுத்துகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் வந்து சென்றுள்ளனர்.  ஆனால் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் யாரும் இதுவரை வரவில்லை.  சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு  ராகுலும், பிரியங்காவும் அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால், அப்போது காரைவிட்டு இறங்கிய பிரியங்கா காந்தி கதறி அழுததால், அவரை அவரை தேற்றிய ராகுல், நினைவிடத்துக்கு செல்லாமலே தங்கையை காருக்குள் அழைத்து சென்று டெல்லி விட்டார். அதனால் அன்றைய தினம் ராகுல் நினைவிடத்துக்கு இருவரும் வர முடியாத நிலை உருவானது. இந்த நிலையில், சுமார் 31ஆண்டுகளுக்கு பிறகு, நாளை முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம்  வருகிறார் ராகுல்காந்தி. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மிஸ்டர் கிளின் என அழைக்கப்பட்ட, ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.  இவர் 21 மே 1991 அன்று தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தபோது,  தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலை  குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அந்த பகுதி நினைவிடமாக அமைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2003ம் ஆண்டு நினைவிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது.

ராஜீவ் மறைவை தொடர்ந்து ராகுல் அரசியல் களத்துக்கு வந்தவர் அவரது மகன் ராகுல்காந்தி, தற்போது வயநாடு எம்.பி.யாக இருக்கிறார். இவர் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி, பாரத் ஜோடோ பாதயாத்திரை என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

இந்த பாத யாத்திரையானது நாளை மாலை குமரி மாவட்டத்தில் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று இரவு 8.15 மணிக்கு ராகுல்காந்தி,  டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அவருடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பாகல் மற்றும் மூத்த தலைவர்கள் வருகிறார்கள். விமான நிலையத்தில் அவரை,  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் வரவேற்கிறார்கள்.

சென்னை விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அவர் அங்கு இரவு தங்குகிறார். தொடர்ந்து, நாளை காலை 6.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்துக்கு என்று மலர் அஞ்சலி செலுத்தி  மரியாதை செய்கிறார்.  அதை தொடர்ந்து அங்கு காலை 7 மணி முதல் 8 மணி வரை  தியானம் செய்கிறார். அதன்பிறகு மரக்கன்று நடுகிறார். தொடர்ந்து, ராஜீவ் நினைவிடத்தை கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும்தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து ராஜீவ் நினைவிடத்தின் வெளியே பாதயாத்திரையின் அடையாளமாக கட்சி கொடியேற்றுகிறார். அதன்பிறகு சென்னை விமான நிலையம் திரும்புகிறார். சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி செல்கிறார்.

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….