னாமா, பஹ்ரைன்

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான GOPIO நடத்தும் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.  இந்த விழாவில் ராகுல் காந்தியுடன் சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொள்கின்றனர்.   இதில் கலந்துக் கொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் பஹ்ரைன் சென்றார்.

அங்கு அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவரான பின்பு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.   விமான நிலையத்தில் அவர் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் திரளாக வந்திருந்தனர்”  என பதியப் பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது ராகுல் காந்தி பஹ்ரைன் பிரதமர் மற்றும் அரச குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.  மேலும் இந்திய வம்சாவளி வணிகத் தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.