டெல்லி
டெல்லி தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வ நன்றியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இதன்ன் மூலம் 26 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக இந்த தேர்தலிலும் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. காங்கிரசின் இந்த தோல்வி குறித்து ஸாஈஈண் ற்லீஎ ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளாரெ.
ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில்,
“டெல்லிசட்டசபை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்கிறோம். தேர்தலில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கட்சித்தொண்டர்களுக்கும், வாக்களித்து ஆதரித்த வாக்காளர்களுக்கும் இதயப்பூர்வ நன்றிகள்’ டெல்லியின் வளர்ச்சிக்காகவும், மாசுபாடு, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராகவும், தலைநகர் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.”
என்று பதிவிட்டுள்ளார்.