புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அவருக்கு அனுப்பப்பட்ட 4வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்நாள் இரவு மணி வரை ராகுலிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று 2வது நாளாகவும் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சோனியாகாந்தி ஜூன் 23ல் ஆஜராக உள்ளார். ராகுலை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் ஏற்கெனவே 3 முறை  அனுப்பியது. அதன்படி 3 நாள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்நிலையில் 4வது முறையாக நாளையும் (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகு மாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.