புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதல்நாள் இரவு மணி வரை ராகுலிடம் விசாரணை நடைபெற்றது. நேற்று 2வது நாளாகவும் விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சோனியாகாந்தி ஜூன் 23ல் ஆஜராக உள்ளார்.

ராகுலை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளதால், அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர். அணுகுசாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.