டில்லி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றக் கூடாது என முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக கடும் தோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்களை மட்டுமின்றி பல மாநில பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அவருடைய இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய பாஜகவின் வாஜ்பாய் அமைச்சரவையில் பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவர் மோடி மற்றும் அமித் ஷாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தார். அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சின்ஹா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் குறித்த பல ஆலோசனைகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வந்தார்.

அவர் ராகுல் காந்தியை பீகார், ஜார்க்கண்ட் மற்றும் டில்லியில் உடனாடியாக கூட்டனியை முடிவு செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியுமென வற்புறுத்தினார் ஆயினும் அவ்வாறான கூட்டணி அமையவில்லை. இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

அதனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவை எடுத்தார்.

யஷ்வந்த் சின்ஹா தனது டிவிட்டரில், “ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் தீவிரமாக இல்லாவிடில் மக்கள் அபிப்ராயத்தில் தோல்வி அடைவார். வேறு ஒருவர் தலைமையில் அல்லது வேறு ஏற்பாட்டில் சில நாட்களாவது காங்கிரஸ் கட்சி இயங்க வேண்டும்” என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.