கர்பா,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். இப்போது இந்த  யாத்திரை சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இன்று சத்தீஷ்கரின் கர்பா மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

அங்கு நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ராகுல்காந்தி,

“பொதுமக்களின் பைகளில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலினத்தினர் 74 சதவிகிதம் உள்ளனர். ஆனால், இந்த சமூகத்தை சேர்ந்த யாரும் நாட்டின் முதல் 200 நிறுவனங்களில் தலைவராகவோ, நிர்வாக அதிகாரியாகவோ இல்லை”

என்று உரையாற்ரினார்.