பழைய புகைப்படம்

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு கருணாநிதியின் 95ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.   அவருக்கு நேரிலும் அறிக்கை மூலமும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதிக்கு டிவிட்டரில் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ”கருணாநிதி நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியம் மற்றும் மன மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிந்துள்ளார்