டில்லி:

ன் சகோதரி மிகவும் திறமையானவர்… அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்… இதனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் என்று  பிரியங்கா குறித்த கேள்விக்கு  ராகுல்காந்தி பதில் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர் உ.பி. மாநிலத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பொறுப்பை ஏற்று, தேர்தல் பணிகளை கவனிப்பார் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன், உத்தப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியாவும், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதற்கும் பொதுச் செயலாளராக கே.சி.வேணு கோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உ.பி. மாநிலத்தில் இருந்துதான் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் பதவிக்கு வருபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியின் தொகுதி உள்பட சோனியாகாந்தி, ராகுல்காந்தி போன்றோரின் தொகுதிகளும் உ.பி. மாநிலத்தில்தான் உள்ளன. இதன் காரணமாக சர்வதேச ஊடகங்களின் பார்வை உ.பி. மீதே பதிந்து உள்ளன.

உ.பி. மாநிலத்தில், கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கழன்று கொண்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில், உ.பி. மாநில நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திறமையான ஒருரை தேடி வந்த காங்கிரஸ் கட்சி, அதற்கு தகுதியானவர் பிரியங்காதான் என்று முடிவு செய்து அவருக்கு பதவி வழங்கி  களமிறக்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த தேர்தல்களின்போது  உ.பி. மாநிலத்தில் தேர்தல் பணிகளை கவனித்துள்ள பிரியங்கா, நாடாளுமன்ற தேர்தலிலும், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பணியாற்றுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், உத்தரபிரதேச அரசியலை மாற்றுவதற்கு நாங்கள்  இளம் தலைவர்களை  விரும்பினோம். அதனால்தான்,  பிரியங்கா காந்தி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போனற் சக்தி வாய்ந்த தலைவர்களை நியமித்து உள்ளோம் என்றார்.

எங்களுக்கு மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுடன் எந்த பகைமையும் கிடையாது. அவர்களுக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய மூன்று கட்சிகளின்  குறிக்கோள் பாஜகவை தோற்கடிப்பதே ஆகும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் போராட்டம்   சகாப்தத்தை காப்பாற்றுவதே என்று கூறினார்.

பிரியங்கா குறித்த கேள்விக்கு, என் சகோதரி மிகவும் திறமையானவர், அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார். நான் தனிப்பட்ட முறையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிரியங்கா அரசியலுக்கு வர வலியுறுத்தி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவரை  அரசியலுக்குள் ராகுல்காந்தி கொண்டு வந்திருப்பது, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

சரியான நேரத்தில் சரியானை முடிவை ராகுல்காந்தி எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிரியங்கா அரசியல் பிரதேசம் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜகவின் வீழ்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது என்றும், பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.