ஹரியானா:
ரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில் ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து பணி செய்தார்.

அதேபோல் அவர் டிராக்டர் ஓட்டியபடியே விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது லேசாக மழை தூரல் விழ அதைப் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் உரையாடினார். அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.