புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி நகைச்சுவையாக பேசினார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீங்கள் ஏன் பாஜக அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போல மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள்; நீங்கள் காங்கிரஸ் அலுவலத்தில் இருக்கீறீர்கள் என்றும் ப்ரீயாகவும், ரிலாக்சாகவும் இருங்கள் என்று நகைச்சுவையாக பேசினார்.

தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து எளிமையாக விளக்கம் அளித்த அவர், விவச்சாயிகுள் போராட்டம் குறித்து நாம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குறித்து புரிதல் நம் அனைவர்க்கும் கட்டாயம் தேவை என்று தெரிவித்தார். வேளாண் சட்டங்களால் விவசாய சந்தைகள் நிலை குலைந்து விடும் என்றும் விலைகளை நிர்ணயம் செய்வதில் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியமில்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழிகிறது என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இனி வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலை உச்சத்தை அடைந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு தற்போது இசிக்கபப்டுவது மிகபெரிய குற்றம் என்று தெரிவித்த அவர், நீங்கள் அவர்களை அடிக்கிறீர்கள்; மிரட்டுகிறீர்கள்; ஏளனம் செய்கிறீர்கள் என்று மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

தொடந்து பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசு விவாசாயிகளிடம் பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு கான வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று குப்பை தொட்டியில் போடுவதே ஒரே தீர்வு என்றும் பேசினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டி வரும் விவாசயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.