டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல்காந்தி! நேரில் ஆதரவு

Must read

டில்லி,

18 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளுடன் ரோட்டில் அமர்ந்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யா ஆகியோர்  விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 1 மணி அளவில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

போராடும் விவசாயிகளுக்கு மத்தியில்  ரோட்டில் அமர்ந்து ராகுல்காந்தி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

அவருக்கு தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளின் பிரச்சினை குறித்து எடுத்துரைத்தார்..

More articles

Latest article