குஜராத்:
ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் நீதிமன்றம்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது குஜராத் உயர்நீதிமன்றம். பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சமீபத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது கேரளா மாநிலம் வயநாடு எம்பி பதவியும் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.