நாக்பூர்

ர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வருமாறு அதன் தலைவர் மோகன் பகவத் விடுத்த அழைப்பை பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் நிராகரித்துள்ளார்.

சமீப காலமாக ஆர் எஸ் எஸ் அமைப்பு தனது நிகழ்வுகளுக்கு அனைத்துத் துறையில் இருந்தும் பிரபலங்களை அழைக்கிறது.    சென்ற வருடம் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தனது பிறந்த தினத்தன்று ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.  அத்துடன் அந்த இயக்கத் தலைவர் மோகன் பகவத் உடன் ஒரு நாள் முழுவதும் பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு இயக்கத்தின்புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி உதவி அளித்தார்.

அதன் பிறகு மற்றொரு நிகழ்வுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத் தலைவரால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டு அவரும் சென்றார்.    அதை தொடர்ந்து ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பல துறைகளை சேர்ந்தவர்களுக்கும்  அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளார்.

நாக்பூர் நகரில் முன்னாள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியும் காந்தியவாதியுமான  சந்திரசேகர் தர்மாதிகாரி மரணம் அடைந்த போது இறுதிச் சடங்குக்கு பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் வந்திருந்தார்.    மகாத்மா காந்தியில் வார்தா ஆசிரமத்துக்கு அருகில் வசிக்கும் ராகுல் பஜாஜ் காந்திய கொள்கைகளை பின்பற்றுபவர் ஆவார்.  அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு இவர் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சடங்கின் போது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நாக்பூர் தலைவர் ராஜேஷ் லோயா ராகுல் பஜாஜை ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வ்ருமாறு மோகன் பகவத் அளித்த அழைப்பை  தெரிவித்தார்.   அப்போது ராகுல் பஜாஜ் அவரிடம் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.   அத்துடன் அவருடைய விமானத்துக்கு நேரமாகி விட்டதால் அவர் உடனடியாக கிளம்பி விட்டர்.

அதன்  பிறகு மீண்டும் அவரை லோயா அழைத்துள்ளார்.  அதற்கு ராகுல் பஜாஜ், ”எனக்கு ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் எந்த ஒரு வேலையிம் இல்லை.  அதனால் தற்போது வர இயலாது.  அத்துடன் எனக்கு மோகன் பகவத்தை சந்திக்க வேண்டும் என்னும் நோக்கமும் கிடையாது.  அவரை வேறு எங்காவது சந்திக்கும்  போது அவருடைய அழைப்புக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்” என கூறி உள்ளார்.