கடந்த 1800ம் ஆண்டுகளின் மத்தியப் பகுதியில், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரராக இருந்தவரும், அந்நாட்டின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்தவருமான ஜானி முல்லாக் பெயரில் ஒரு விருதை, இந்தாண்டு முதன்முறையாக அறிவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.

இவர், ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர். இதனால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், சிறப்பாக செயல்படும் வீரருக்கு, இந்தாண்டு முதல் அவர் பெயரில் ‘ஜானி முல்லாக்’ விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முடிவில், இந்தப் பெயரிலான முதல் விருதை கட்டாயம் ஒரு ஆஸ்திரேலிய வீரர்தான் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய வீரர் ரஹானே முதல்முறையாக வென்றுள்ளார்.

சிறப்பான கேப்டன்சி மற்றும் அற்புதமான சதம் ஆகியவற்றுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.