சென்னை:
மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன், அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.தியாக ராஜனுடன் மெய் நிகர் தளத்தில் உரையாடினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில் இந்தியா பெரிய நாடு, ஒன்றிய அரசால் மட்டுமே இதை நிர்வகிக்க முடியாது. எனவே, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதன் மூலமே மக்கள் அதனை அனுபவித்திட முடியும். ஜனநாயகமும் வலுப்பெறும் என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன், தற்போது தமிழக மாநில பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel