டெல்லி: ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் முர்மு உத்தரவிட்டு உள்ளார்.

ஒடிசா மற்றும் திரிபுரான மாநிலங்களுக்கான ஆளுநர்களை மத்தியஅரசு மாற்றி உள்ளது. இதற்கான உத்தரவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஒடிசா  ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரகுபர் தாஸ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். 2014 முதல் 2019 வரையில் ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தார். தற்போது இவர், பாஜகவில் தேசிய அளவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  நல்லு தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக தலைவர் மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.