ராகவன் ஆபாச வீடியோ விவகாரம்: மதன், வெண்பாவை பாஜகவில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவிப்பு…

Must read

சென்னை: பாஜக உறுப்பினர் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ விவகாரத்தில் அதை வெளியிட்ட மதன், வெண்பாவை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதேவேளையில், பாரதியஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர்கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

சிவசங்கர் பாபா – வீடியோ விவகாரம்: பாஜக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்…

More articles

Latest article