இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகின்றனர் .
தமிழ் நடிகர்களில் முதன்மையாக 3 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தவர் ராகவா லாரன்ஸ்.அதனைத் தொடர்ந்து தனியாக தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கினால் அவதியுற்று வரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார் ராகவா லாரன்ஸ்.