ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ இப்படத்தை சாய்ரமணி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு மிரட்டல் வருவதாக போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்.பி.சௌத்ரி அளித்த புகார் மனுவில் “மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலீஸ் செய்ய சிலர் இடையூரு செய்வதோடு, மிரட்டலும் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.