புதுடெல்லி: இந்திய – வங்கதேச நாடுகளுடைய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடலில் துவங்கியுள்ளது.
இப்பயிற்சியில் இந்திய போர்க்கப்பல்கள் கில்தான், குக்ரி ஆகியவற்றுடன் வங்கதேச கப்பல்களான அபுபக்கர், புரோட்டி, ஹேலோ உள்ளிட்டவை கலந்து கொள்கின்றன.
இரு நாடுகளும் கடலோர பாதுகாப்புக்கான பயிற்சியை ஞாயிறு(நேற்று) மற்றும் திங்கள் இருநாட்களிலும் மேற்கொள்கின்றன. கடல்வழியாக பயங்கரவாத ஊடுருவல்களை முறியடிப்பது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது, மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இப்பயிற்சியில் இடம் பெறுகின்றன.
வங்கதேச நிறுவனத் தலைவர் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளையொட்டி அந்நாடு இந்தியாவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.