மெல்போர்ன்

ன்று நடந்த ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டததை ரஃபேல் நடால் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இன்று ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்ப்யின் நாட்டின் ரஃபேல் நடா மற்றும் ரஷ்யாவின் மெட்லதேவ் ஆகிய இருவரும் மோதினர்.   தொடக்கத்தில் ரஷ்ய வீரர் மெட்லதேவ் இரு செட்களையும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார்.

ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் சுற்றில் ரஃபேல் நடால் அபாரமாக வென்று இரு செட்டிகளிலும் வெற்றி பெற்றார்.   நான்காம் செட் முடிவில் இருவரும் 2 செட்களில் வென்று சம நிலையில் இருந்தனர்.   எனவே ஐந்தாம் செட்டை அனைவரும்  ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இந்த ஐந்தாம் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் வென்று அசத்தினர்.   இந்த போட்டி சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நடந்தது.  இறுதியில் ரஃபேல் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   இந்த போட்டியில் ரஃபேல் நடால் 6,6-7,6-4,6-4,7-5 என்ற கணக்கில்  வெற்றி பெற்றார்.

 

இது ரஃபேல் நடாலின் 21 ஆம் கிராண்ட் ஸ்லாம் வெற்றி ஆகும்.  அவர் இதுவரை வெற்றி  பெற்ற போட்டிகளின் பட்டியல் பின் வருமாறு :

பிரெஞ்ச் ஓபன் – 13

அமெரிக்க ஓபன் – 4

விம்பிள்டன் – 2

ஆஸ்திரேலிய ஓபன்- 2

இது உலக அளவில் சாதனை ஆகும்.  ஏற்கனவே அதிக முறை வெற்றி பெற்ற ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜோகோவிச்சை விட ரஃபேல் நடால் அதிக வெற்றி பெற்று அவர்களை  பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

கடந்த 2021 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஆம் தேதி அன்று ரஃபேல்  நடாலுக்கு  காலில் அறுவை சிகிச்சை நடந்தது.  எனவே அவர் திரும்பவும் டென்னிஸ் விளையாடுவாரா என்று ஐயத்தில் அனைவரும் ஆழ்ந்தனர்.  இந்நிலையில் இவர் இன்று 21ஆவது கிராண்ட் ஸ்லாம் வென்று சாதனை படைத்துள்ளார்.