தொலைக்காட்சி தொடர்களிலும் தனக்கென்று தனி பாதை வகுத்து வலம் வந்தவர் ராதிகா .

சமீபகாலமாக அவரது சீரியல்கள் அவ்வளவாக எடுபடவில்லை. இதனால், அவர் ஆரம்பித்து புதிய வரலாற்று சீரியலில் இருந்து பாதியில் விலகியவர்,

இந்த நிலையில், ராதிகாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த ‘சித்தி’ சீரியலின் இரண்டாம் பாகத்தை மிக பிரம்மாண்டமான முறையில் ராதிகா தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.