விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. தற்போது முகென், சாண்டி , ஷெரீன், லோஸ்லியா ஆகியோர் உள்ளனர்.

முகென் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், இதுவே நாளைய முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை லோஸ்லியாவும், மூன்றாவது இடத்தில் சாண்டியும், நான்காவது இடத்தை ஷெரின்னும் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.