
‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கு ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காகப் படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.
‘ராதே ஷ்யாம்’ படத்துக்காக 70களின் இத்தாலி நகரைப் போல ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. அதில் மருத்துவமனையைப் போல அமைக்கப்பட்டிருந்த ஒரு அரங்கைப் படக்குழுவினர் கொரோனா நோயாளிகளுக்காகத் தனியார் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.
அத்துடன் 50 பெரிய படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கவச உடைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் படக்குழுவினர் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் 9 லாரிகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
Patrikai.com official YouTube Channel