சமீபத்தில் ஆப்ரிகாவின் கானா நாட்டின் கானா பல்கலை கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா என்று இந்தியாவிலும் உலகமுழுவதும் கொண்டாடப்படும் காந்தியை இனவெறியர் இவரது சிலையை பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றுங்கள் என்று சிலர் கானா நாட்டில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

gandhi

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது இந்தியர்கள் ஆப்ரிக்கர்களைவிட உயர்ந்தவர்கள் என்றும், ஆப்பிரிக்கர்களை காட்டுமிராண்டித்தனமான வேட்டைக்காரர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் தனது குறிப்புகளில் எழுதியிருப்பதாகவும். அவர் இந்தியாவில் ஜாதி கட்டமைப்பு முறையை தக்க வைக்க பாடுபட்டவர் என்றும் சொல்லி அவர் சிலையை அகற்றிவிட்டு ஆப்ரிக்காவுக்காக பாடு பட்ட மண்ணின் மைந்தர்களின் சிலைகளை நிறுவுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மனுவில் 1000-க்கும் மேலானவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எனவே காந்தி சிலை விரைவில் கானா பல்கலைக் கழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது.