நாய்க்கடி இவ்வளவு பயங்கரமானதா? 

நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை, நோய் முற்றிய நிலையில் உலகில் எந்த மருந்தாலும், மருத்துவர்களாலும் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரேபீஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் வாயிலிருந்து நாய்க்கு வடிவது போல் உமிழ்நீர் வடிந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் அவர்கள் மிருகம் போல நடந்து கொளவார்கள். கண்ணில் காண்பவர்களையெல்லாம் கடித்துக் குதறிவிடுவார்கள்.. நோய் முற்றி மரணத்துக்கு சமீபமான சில நாட்கள் நோயாளி நடந்து கொள்ளும் விதம் மிக பயங்கரமானது. உலகிலெயே மிகவும் வலி மிகுந்த மரணமாக இது கருதப்படுகிறது.

dog-1
உலகிலேயே இந்தியாவில்தான் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகப் பெருகி வருகிறது. அவற்றில் 15% நாய்கள் எந்தத் தடுப்பூசியும் போடப்படாதவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 17.4 மில்லியன் பேர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். அதில் 20,847 பேர் ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழக்கிறார்கள்.  இதில் அதிகமானபேர் இரவு ஷிப்ட் முடித்து வீடு திரும்பும் வழியில் நாய்க்கடிக்கு ஆளாகும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் என்பது சமீபத்திய புள்ளிவிபரமாகும்.
ரேபீஸ் கொடூரத்தை தடுக்க ஒரே வழி நாய் கடித்தவுடன் தாமதமின்றி தடுப்பூசி போட்டுக்கொ ள்வதுதான்.  நாய்கடித்தவுடன் போதுமான மருத்துவச் சிகிச்சை செய்யாமல் அலட்சியம் காட்டுவதே இந்தியாவில் பல உயிரிழப்புகளுக்கு கரணமாகும். ஒருவர் உடலில் ஒரு புண் இருந்து அதை ரேபீஸ் தாக்கப்பட்ட நாய் நக்கினால்கூட அவரை இந்தக் கொடூர நோய் தொற்றிக்கொள்ளும்.
Prevent-Rabies
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
1. நாய் கடித்தவுடன் ஒரு 15 நிமிடங்களுக்கு கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தமாகத் தேய்த்து கழுவிக்கொண்டே இருங்கள்.
2. கடிபட்ட இடத்தில் பிளாஸ்திரியோ தையலோ போட வேண்டாம்
3. உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகுங்கள்.
4. தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்.
5. தடுப்பூசியை இஷ்டத்துக்கு மாற்றாதீர்கள். எத்தனை ஊசி போட வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தாரே அத்தனை ஊசிகளையும் தயங்காமல் போட்டுக்கொள்ளுங்கள்.
ரேபீஸ் பற்றி மேலும் சில புள்ளி விபரங்கள்:
1. இந்தியர்களில் 70% பேருக்குத்தான் ரேபீஸ் பற்றி தெரியும்
2. 30% பேருக்குத்தான் நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை கழுவுதல் மிக அவசியம் என்று தெரிந்திருக்கிறது.
3. இந்தியாவில் நாய்க்கடி பட்டவர்களில் வெறும் 60% பேரே தடுப்பூசி போட்டுக்கொள்ளுகின்றனர்.
4. ரேபீஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடியது. ஆனால் 100% தடுக்கப்படக் கூடியதுங்கூட
rabis-1