சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வதற்கான மக்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பு மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில், கொரோனா தடுப்பூசிக்கான டோக்கனைப் பெறுவதற்காக, மக்கள் நீண்டவரிசையில், கடும் கோடை வெயிலில் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால், அவர்களில் பலருக்கு டோக்கனே கிடைப்பதில்லை. அப்படியே, டோக்கன் பெற்றவர்களுக்கும், தடுப்பூசி நிச்சயம் போடப்படுமா? என்ற உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில், பலரும் வயதானவர்கள் என்பது இன்னும் சோகமான விஷயம்.

காலை 10 மணிக்கு வருபவர்கள், பிற்பகல் 3 மணியாகியும் வரிசையிலேயே காத்துக் கிடக்கின்றனர். பலர், நேரமின்மை காரணமாக, மதிய உணவைக்கூட எடுத்துக்கொள்ள முடிவதில்லை. சென்னை மக்களைப் பொறுத்தவரை, பலரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

ஏனெனில், அங்குதான் கோவாக்சின் தடுப்பு மருந்து போடப்படுகிறது என்பதும், அந்த மருத்துவமனை பிரபலமானது என்பதும் ஒரு காரணம். பலபேர், அன்றைய நாளில் டோக்கன் பெற்றாலும், அவர்களுக்கு மறுநாள்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் நபர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரிக்கும் சூழலில், மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

[youtube-feed feed=1]