டெல்லி: புதுச்சேரியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தற்போது டெல்லியில் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு பெட் இல்லை என கூறி, மாநில கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

பாஜக உறுப்பினராக முன்னாள் ஐபிஸ் அதிகாரி, புதுச்சேரி கவர்னமாக மோடி தலைமையிலான பாஜகஅரசால் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி மாநில அரசுக்கு போட்டியாக செயல்பட்டும், மாநில அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு, பிரச்சினை செய்து, மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வெறுப்பை சம்பாதித்தார். கிரண்பேடியை மாற்றக்கோரி வழக்குகளும், மத்தியஅரசுக்கு ஏராளமான முறையீடுகள் சென்றன.

இதையடுத்து, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு கிரண்பேடி அங்கிருந்து அகற்றப்பட்டார். தற்போது டெல்லியில் குடியிருந்து வருகிறார்.

டெல்லியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 6692 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்,  மொத்த பாதிப்பு 730825 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமேலும் 141  பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 61 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்கு பெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை காரணமாக கொண்டு கிரண்பேடி டெல்லி அரசியலில் மாநில அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டில்,.

சில இடங்களில் 25 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் மட்டுமே சிகிச்சை அளித்து வருவதாகவும்,  நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கவில்லை.  நோய்வாய்ப்பட்ட எங்கள் நோயாளிகளை எங்கிருந்து அழைத்துச் செல்வது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

கிரண்பேடியின் திடீர் டிவிட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுமு.