சவூதி அரேபியாவின் வேண்டுகோளை ஏற்று ஹஜ் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு தனது நாட்டு எல்லையை திறந்துள்ளது கத்தார்.
இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவூதி நோக்கி பயணமாகி வருகிறார்கள்.
இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிரவாதத்தை வளர்க்கிறது’ என்று கூறி கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்திருந்தன.
இந்நிலையில் ஹஜ் பயணிகளின் வசதிக்காக, கத்தார் எல்லையை திறந்துவிடுமாறு சவூதி கோரிக் கை விடுத்திருந்தது. மேலும், கத்தாரில் இருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கான முழுச் செலவையும் தாமே ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும், ஹஜ் பயணிகளை அழைத்து வருவதற்காக தனி விமானங்கள் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மன்னர் சல்மான் அறிவித்திருந்தார்.
இதையடுத்து கத்தார் தனது நாட்டு எல்லையை திறந்துள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி சவுதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை தொடர்ந்து, சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையேயான சாலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.