நாடு முழுவதும் தற்போது செயல்பட்டு வரும் வைபை தொழில்நுட்பத்தில், மேலும்  300 மடங்கு வேகமாக செயல்படும்  அதிவேக வை-பை தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஆராயச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுவதும் இன்டர்நெட் வளர்ச்சி இன்றியமையாததாகி உள்ளது.  ஒவ்வொரு நாட்டிலும் முக்கியமான இன்டர்நெட் முக்கிய விஷயமாக இருந்து வருகின்றது.

இன்டர்நெட் வளர்ச்சி பல புதுமையான விஷயங்களுக்கு வழி வகுக்கின்றது.  நாட்டில் அதிகபட்ச இன்டர்நெட் பயன்பாட்டில் ஜெனிவா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், தற்போது உள்ளதைவிட 300 மடங்கு அதிவேகம் கொண்ட கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதி (வை-பை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் உள்ள ஈந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியருமான டான் கூனென் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் ஒரு விநாடிக்கு 3 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

புதிதாக ‘அகச்சிவப்பு வை-பை’ (இன்ப்ரா ரெட்)  என்ற பெயரில் கம்பியில்லா இணையதள இணைப்பு தொழில்நுட்ப வசதியை கண்டுபிடித்துள்ளதாகவும்,  அதாவது ஒளிக் கதிர்களைப் பயன்படுத்தி கம்பியில்லாமல் தகவலை பரிமாற்றம் செய்யலாம் என்று கூறி உள்ளார்.

இந்த தொழில்நுட்பம் மூலம் வெளியாகும்  எஒவ்வொரு கதிரும் அதிவேக திறனுடன் செயல்படும் என்றும் தற்போது உபயோகப்படுத்தி வரும்  ஆப்டிகல் பைபர் செய்யும் பணியைத்தான் இதுவும் செய்யும் என்று கூறி உள்ளார்.

மேலும், இந்த அகச்சிவப்பு கதிர்கள்மூலம்  விநாடிக்கு 112 ஜிகாபைட் தகவலை பரிமாற்றம் செய்ய முடியும். அதாவது 3 முழு நீள எச்.டி. திரைப்படங்களை ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்யலாம்.

இது தற்போது நாடு முழுவதும் இயங்கிவரம் இன்டர்நெட் வேகத்தை விட 300 மடங்கு அதிகம் என்று கூறி உள்ளார்.

இன்னும் 5 ஆண்டுகளில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் டிஜிட்டல் புரட்சியின் மற்றொரு அத்தியாம் இன்ப்ராரெட் கதிர்கள் மூலம் உருவாக உள்ளது.