டோக்லம்

ந்தியா-சீனா-பூட்டான் எல்லையில் சீன வீரர்கள் எல்லை தாண்டி புக முயற்சித்ததால் ஏற்பட்ட நேருக்கு நேர் சண்டையில் இருதரப்பிலும் சில போர்வீரர்கள் காயமடைந்தனர்.   சீன வீரர்கள் பின் வாங்கினர்.

இந்தியா – சீனா – பூட்டான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைக்கோடு உள்ள  டோக்லம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.   இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு போர் வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், நேற்று கல்லெறி சம்பவம் நிகழ்ந்ததையொட்டி இந்திய வீரர்கள் ஒரு மனிதச் சங்கிலி அமைத்து எல்லையை  பாதுகாத்தனர்.  அப்போது சீன போர் வீரர்கள் எல்லையை தாண்டி உள்ளே புக முயற்சி செய்ததால், இரு தரப்புக்கும் இடையே நேரடி சண்டை ஏற்பட்டது.  இரு தரப்பிலும் சில போர் வீரர்கள் காயம் அடைந்தனர்.   பின் சீன வீரர்கள் பின் வாங்கினர்.

இரு முறை சீன வீரர்கள் எல்லை தாண்ட முயன்றனர்.  இருமுறையும் அவர்கள் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.    எல்லைப் பகுதிகளில் வீரர்கள் குவிப்பதை இரு நாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இந்திய வீரர்கள் தங்களது உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை மேலும் சேமித்து வைக்க ஆரம்பித்துள்ளனர்.   ஒரு சுமுகமான தீர்வு காணும் வரை வீரர்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லப்படுகிறது.