பிலிப்பைன்ஸ்: பெண் தொழிலாளர்கள் ஹை ஹீல்ஸ் அணிய தடை

மனிலா:

பிலிபைன்ஸ் நாட்டு அலுவலகங்களில் பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிய தொழிலாளர் நலத் துறை தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

தொழிலாளர்களின் தேவை குறித்த கொள்கைகளை வடிவமைக்குமாறு பிலிப்பைன்ஸ் தொழிலாளர் நலத்துறைக்கு அந்த துறை செயலாளர் சில்வெஸ்டர் பெலோ உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களில் பெண் தொழிலாளர்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணியவும். பணியின் போது நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதற்கும் விரைவில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைஹீல்ஸ் அணிவதாலும், பணியின் போது நீண்ட நேரம் நின்று கொண்டே இருப்பதாலும் தொழிலில் பாதுகாப்பு இல்லாமையும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது. அந்நாட்டு தொழிலாளர் சங்க யூனியன் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சங்க தேசிய செயல் துணைத் தலைவர் ஜெரார்டு செனோ கூறுகையில்,‘‘ நீண்ட நேரம் நடப்பது மற்றும் நிற்பதால் கால்களில் வலி ஏற்படுவதாக விற்பனை பிரிவில் பணியாற்றும் பல பெண் தொழிலாளர்களிடம் இருந்து புகார்கள் வந்தது.

ஹைஹீல்ஸ் அணிவதால் தலை, முதுகு தண்டு, பாதம் போன்ற இடங்கள் பாதிக்கப்படுகிறது. வலி ஏற்ப டுவதோடு பெண்கள் தடுமாறி விழுவதால் காயங்களும் ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் ஹைஹீல்ஸ் அணிய விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றார்.

பாலின வேறுபாடு, பாலின அடையாளத்திற்காக பிரத்யேக காலணிகளை அணிய வேலை அளிப்பவர்கள் வற்புறுத்தக் கூடாது என்று பிரிட்டிஷ் கொலும்பியா, கனடாவில் ஏற்கனவே மசோதா தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த பாலின வேறுபாடு காலம் கடந்தது. அதோடு ஆபாசமானது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
English Summary
Philippine government to ban high heels in the workplace