சீனாவில் நடைபெற்றுவரும் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சிந்து வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு போட்டியில் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

pv-sindhuசீனாவின் ஃபுசோ நகரில் நடைபெற்று வரும், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளீர் அணி சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆடவர் அணி சார்பில் அஜய் ஜெயராம், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் சீன தைபேயின் சியா சின் லீயை முதல் சுற்றில் எதிர்கொண்ட பி.வி.சிந்து 21-12, 21-16 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றார். மற்றொரு போட்டியில் தாய்லாந்தின் பார்ன்டிப் புரனாப் செர்ட்சுவை எதிர்கொண்ட சாய்னா நேவால் 16-21, 21-19, 14-21 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்து சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பி.வி.சிந்து அதே போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கம் பெற்று தந்தார். தற்போது, சீன போட்டியிலும் வெற்றி பெற்று நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.