எந்த நிபந்தனையும் விதிக்காமல் பா.ஜ.க.மற்றும் பா.ம.க. கட்சிகள் ,அ,தி.மு.க.கொடுத்த தொகுதிகளை வாங்கி கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து போட்டுவிட்டன.
ஆனால் குட்டி கட்சிகள் கதை அப்படி இல்லை.
த.மா.கா.வுக்கு 2 மக்களவை தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்துள்ளது.தங்களது இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.இதனை ஏற்க ஜி.கே.வாசன் மறுத்து விட்டார்.
‘கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தென்னந்தோப்பு சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’’ என அடம் பிடிக்கிறது அந்த கட்சி.
புதிய தமிழகமும் –இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மறுத்து விட்டது.கூடவே இன்னொரு நிபந்தனையும் விதிக்கிறது.
அந்த கட்சிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்க அ.தி.மு.க.முடிவு செய்துள்ளது.
இது தவிர ,இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரம் தொகுதியையும் அந்த கட்சி கோருகிறது. இந்த தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி – கடந்த தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இந்த தொகுதியில் அவர் சுயேச்சையாக ஒரு முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு முறையும் போட்டியிட்டு வெற்று பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘’21 தொகுதி இடைத்தேர்தலை மனதில் கொண்டே கூட்டணி அமைத்து வருகிறோம். இதில் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் அ.தி.மு.க.ஆட்சிக்கான பிராணவாயு . நிலமை இப்படி இருக்க கூட்டணியில் குழப்பத்தில் ஏற்படுத்துகிறார் கிருஷ்ணசாமி’’ என்கிறார்கள் ஆளும் கட்சிகாரர்கள்.
—பாப்பாங்குளம் பாரதி