சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. புதிய தமிழகம் கட்சி சார்பில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், திமுக, அதிமுக, மக்கள்நீதி மய்ய்ம, அமமுக தலைமையில் 4 கூட்டணிகள் அமைந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய புதிய தமிழகம் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. அதுபோல, பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமின் 87-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாயாவதி,  பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  5 மாநில சட்டசபை தேர்தலில், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும்.  கடந்த காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது எங்களுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது. அதாவது, தேர்தலில், எங்கள் கட்சியின் ஆதரவு ஓட்டுகள், மற்ற கட்சிகளுக்கு செல்லும். ஆனால், பிற கட்சிகளின் ஓட்டுகள் எங்கள் கட்சிக்கு வராது. எனவேதான் தனித்து போட்டியிடுகிறோம் என்றார்.

அதுபோல, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று கூறியதுடன்,  60 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைவெளியிட்டார். அதன்படி,

ஓட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.

கோவில்பட்டி-அய்யர், விளாத்திகுளம்-செ.முத்துக்குமார், ஸ்ரீவைகுண்டம்-பா.அருண், நெல்லை-கு.செல்வமணி, நாங்குநேரி-அசோக்குமார், அம்பாசமுத்திரம்-மு.சுரேந்திரன், ஆலங்குளம்-அ.உதயகுமார், தென்காசி-ச.சந்திரன், கடையநல்லூர்-சி.பவுலிங் எலிசபத் ராணி, வாசுதேவநல்லூர்-செ.பேச்சியம்மாள், சங்கரன்கோவில்-வே.சுப்பிரமணியம், ராஜபாளையம்-தனுஷ்கோடி, ஸ்ரீவில்லிப்புத்தூர்-சாந்தி, சாத்தூர்-கோ.மாரிக்கண்ணன். விருதுநகர்-கு.குணம், திருச்சுழி-திருமுருகன், பரமக்குடி-ராஜீவ்காந்தி, ராமநாதபுரம் -விக்ரம் என்கிற விக்கிரமாதித்தன், முதுகுளத்தூர்- மலைச்செல்வம், திருவாடனை-செல்வம், கன்னியாகுமரி-ஆ.பூமணி, காரைக்குடி-வனிதா பாலசுப்பிரமணியன், மானாமதுரை-சி.ராஜையா, சோழவந்தான்-இந்திராணி சேதுராமன், மேலூர்-ம.பன்னீர்செல்வம்.

மதுரை கிழக்கு-சிறுதூர்.அ.பாலா என்ற பாலமுருகன், உசிலம்பட்டி- சி.திருச்செல்வம், போடிநாயக்கனூர்-பழ.நாகேந்திரன், பெரியகுளம்-மா.முருகன், ஆண்டிப்பட்டி-சு.வேல்மணி, நிலக்கோட்டை-பெ.சரவணன், பழனி-ம.பெரியதுரை, வேடசந்தூர்-ர.பிரசாந்த், திண்டுக்கல்-அ.முருகேசன், கிருஷ்ணராயபுரம்- பெ.அசோகன், குளித்தலை-ம.சிவக்குமார், துறையூர்-குணசேகரன், மணச்சநல்லூர்- ம.தினகரன். திருவெறும்பூர்-அ.பிச்சைமுத்து, திருச்சி மேற்கு-கோ.சண்முகம், மணப்பாறை-வக்கீல் இளையராஜா, விராலிமலை-பொ.ஆறுமுகம், அறந்தாங்கி-அமலதாஸ், திருமயம்-சிவக்குமார், திருவையாறு-உத்திராபதி, தஞ்சாவூர்-பெரியார்செல்வன், திருவாரூர்-தியாகராஜன், நன்னிலம்-சவுந்தரபாண்டியன், மன்னார்குடி-ச.சதீஷ், திருத்துறைப்பூண்டி-ஏ.கே.சுரேஷ், கீழ்வேளூர்-சோ.முத்தழகன். பெரம்பலூர்-பாலாஜி, நாமக்கல்-செல்வக்குமார், அந்தியூர்-த.அய்மன்னன், அவினாசி-சாமுவேல், மடத்துக்குளம்-க.மகாலிங்கம், சூலூர்-சங்கர்குரு, வால்பாறை- மா.செந்தில்முருகன், பல்லாவரம்-ர.அஜித்குமார்.

[youtube-feed feed=1]