சென்னை
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது/

கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படமான ‘புஷ்பா தி ரைஸ்’. மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவானது. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க் பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
இந்த;ப்படம் பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ‘புஷ்பா 2’ முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும். மேலும் இத்திரைப்படம் வெளியான 32 நாட்களில் ரூ. 1831 கோடியை வசூல் செய்தது.
‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி ரிலிஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ‘புஷ்பா 2’ ரீலோடட் வெர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் ஜனவரி 30 ஆம் தேதி இப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]