அமிர்தசரஸ்:
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

Congress

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக அகாலிதளம்- பாஜக கூட்டணி அரசுதான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 4-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பை இந்தியா டுடே- மை ஆக்ஸிஸ் இண்டியா இணைந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கு மொத்தமே 4 முதல் 7 இடங்கள்தான் கிடைக்குமாம். இக்கூட்டணி 17% அளவுக்கு வாக்கு சரிவை சந்திக்கும்
காங்கிரஸ் கட்சி 62 முதல் 71 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றுமாம். ஆம் ஆத்மி கட்சி 42 முதல் 51 இடங்களைக் கைப்பற்றி முக்கிய எதிர்க்கட்சியாக அமரும் என்கிறது எக்ஸிட் போல் முடிவு.